முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலையொட்டி பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-8 ஏற்றம்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-   பாம்பன் கடலோரப்பகுதியில் கஜா புயல்  கரை கடத்தும் என வனிலை மையம் அறிவிப்பையடுத்து பாம்பன் துறைமுகத்தில் நேற்று புயல் எச்சரிக்கை கூண்டு எண் 8 ஏற்றப்பட்டு அப்பகுதியில் வசிக்கு மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க மீன்துறை அதிகாரிகள் அறிவிறுத்தப்பட்டனர்.
   . வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை உருவாகியுள்ளது.இதனால்   வட சென்னை,தென் சென்னை ஆகிய பகுதியில் தென் கிழக்கு ஆழ் கடலோரப் பகுதியில் 930 கி.மீ வேகத்தில்  ராட்சச அலையுடன் பலத்த சூறாவளி காற்று உருவாகியுள்ளது.அதுபோல ஆந்திர பிரதேசம் தென் கரிகோடா கடலோரப்பகுதியில் 980 கி.மீ வேகத்திலும்,அந்தமான்  வடக்கு,தென் கிழக்கு போர்ட் ப்ளைர் கடலோரப்பகுதியில் 430 கி.மீ வேகத்திலும்  காற்று வீசி வந்தது.இந்த நிலையில் இந்த  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலூர்,பாம்பன் ஆகிய கடல் பகுதியில் கரை கடக்கும் என இந்திய வானிலை மையம்    அறிவித்தது. அதன் பேரில் பாம்பன் உள்பட  தமிழக கடலோரப்பகுதியில் புயலை எதிர்கொள்வது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் புயலால் உருவாகும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான அனைத்து ஆயுத்து பணிகளையும் முன்னதாகவே தயார் நிலையில் வைத்துள்ளார்.இதனையடுத்து பாம்பன் கடலோரப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாகவும் ,முன்னெச்சரிக்கையாகவும் இருக்கும் வகையில் பாம்பன் துறை முகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 8 நேற்று ஏற்றப்பட்டது.அதுபோல ராமேசுவரத்திலிருந்து வெளியூர்களுக்கும் பாம்பன் ரயில் பாலம் வழியாக இயங்கப்பட்ட அனைத்து ரயில்களும் ரத்து செய்து மதுரை,மானாமதுரை ரயில் நிலையத்தியிலிருந்து வியாழக்கிழமை முதல் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ராமேசுவரம்,மண்டபம்,பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த   ஆயிரத்துக்கும்  மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் தென்கடல் பகுதியில் குந்துகால்,சின்னப்பாலம் போன்ற பகுதிகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி பாதுகாத்து வருகின்றனர்.  கடலோரப்பகுதியில் வசிக்கு மீனவர்கள் பாதுகாப்பாகவும்,முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என துறைமுக அதிகாரிகள் அவ்வொப்போது அறிவிறுத்தி வருகின்றனர்.

 அமைதி காக்கும் பாம்பன் கடல்: மீனவர்கள் அச்சம்:

 1964 ஆண்டு பெரும் புயல் தாக்கத்தால் தனுஸ்கோடி நகரமே அழிந்து இந்திய,இலங்கை பொருளாதாரமே சின்னபின்னமாக ஆனது.அதற்கு   பின்பு ராமேசுவரம் தீவு பகுதியில் புயல் அபாயம் வந்ததில்லை.இந்த நிலையில் கஜா புயல் பாம்பன் கடலோரத்தில் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.ஆனால் பாம்பன் கடலில் புயலுக்கான எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் அமைதியாக கடல் உள்ளது.மீனவர்கள் மத்தியில் இந்த மாதிரி கடல் இருந்தால் பெரும் அபாயம் ஏற்படும் என முன்னோர்கள் கூறியுள்ளதால் பேசப்பட்டு வருகின்றனர்.ஆதலால்  புயல்  கடக்கும் அறிவிப்பு இருந்தும் அமைதியாக உள்ள பாம்பன் கடலை பார்த்து அப்பகுதி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.                            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து