முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் மிகப்பெரிய வெற்றியை நேசிக்கிறார். டெண்டுல்கர், லாரா போன்றே விராட் கோலியும் சிறந்த வீரர். அபாயகரமான பேட்ஸ்மேன். சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளார். தற்போதுள்ள இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுவதை என்னால் ஏற்க இயலாது. நான் விளையாடிய இந்திய அணிகளை விட தற்போதுள்ள அணி சிறந்ததாக கருதவில்லை. வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அவர் அவ்வாறு கூறி இருக்கலாம். இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம்.

சவாலானதே... ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே தற்போதுள்ள இந்திய அணி நல்ல தயார் நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருக்கிறது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஸ்டீவ்வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1999-ல் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து