முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்....இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடியெல்டுவில் தொடங்குகிறது. 70 ஆண்டுகளில் இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது இல்லை. 2003-04-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்ததே ஆஸ்திரேலியாவில் சிறந்த நிலையாகும்.

தொடரை வெல்லுமா?இந்த சுற்றுப்பயணத்தில் தொடரை வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா கடைசி டெஸ்டில் சிறப்பாக வெற்றி பெற்றது. பிரிஸ்பேரில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. அடிலெய்டுவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. மெல்போர்ன் டெஸ்டை வென்று ஆஸ்திரேலியா சமன் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா செல்லும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-நமது பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தால் வேகப்பந்து வீரர்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த இயலும். வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லும். 11 பேர் கொண்ட அணியில் 3 வேகப்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.வார்னர், சுமித் இல்லாதது இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாகும்.

பொறுத்தமானவர்... என்னை பொறுத்தவரை ரோகித்சர்மாவை 11 பேர் கொண்ட அணியில் சேர்க்க வேண்டும். தற்போது பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கும் அவர் 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர். மற்றொரு வாய்ப்புக்கு அவர் தகுதியானவர். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து