முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன்னலோர சீட் கேட்ட பயணிக்கு மேகங்களின் படம் வரைந்து கொடுத்த விமான பணிப்பெண்

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானில் விமானத்தில் புக் செய்து விட்டு ஏறிய ஒருவருக்கு ஜன்னல் சீட் கிடைக்காமல் போய் விட்டது. ஆனால் அந்த பயணியோ ஜன்னல் சீட் இல்லையே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார். விமானத்தில் இருந்த பணிபெண்ணை கூப்பிட்டு, ஜன்னல் சீட் தனக்கு வேண்டும் என்று கேட்டார். அந்த பெண்ணோ அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சொல்லி விட்டார்.

ஆனால் பயணிக்கோ, கிழித்து செல்லும் மேகங்களையும், கீழே உள்ள பூமியையும் பார்க்க வேண்டும் என்று ஆசை. இவ்வளவு செலவு பண்ணி விமானத்தில் ஏறியும் ஜம்மென்று உட்கார்ந்து அந்த மேகத்தை பாக்க முடியலையேன்னு அவருக்கு ஏக்கமாக இருந்தது. அதனால் திரும்ப திரும்ப அந்த விமான பணிப்பெண்ணை கூப்பிட்டு, ஜன்னல் சீட்டை மீண்டும் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்தார் விமான பணிப்பெண்.

ஒரு பேப்பர் எடுத்து வந்து அதில் வானத்தில் மேகங்கள் மிதப்பது போல் வேக வேகமாக வரைந்து பயணி பக்கத்தில் இருந்த அந்த ஜன்னலின் மீது ஒட்டி விட்டார். இதை பார்த்ததும் அந்த பயணிக்கு அதிர்ச்சியாகி விட்டது.

கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்சிட்டு இருந்த மேகம்கூட தற்போது சுத்தமா தெரியாம போய் விட்டது. விமானம் கீழே இறங்கும் வரைக்கும் வாயே திறக்காமல் கப்-சிப் என்று உட்கார்ந்து விட்டார் அந்த பயணி. அந்த பணிப்பெண் வரைந்த படத்தை பார்த்தால் அவ்வளவு மோசமாக இருந்ததாம். இந்த படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து