முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் தாக்குதலை சிறப்பாக கையாண்ட அரசுக்கு கமல் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்து கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து