முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம் ஏசுநாதர் சிலை உடைந்தது

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

நாகை : கஜா புயலின் தாக்கத்தின் காரணமாக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலின்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனால் உலக பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கே புதிதாக நிறுவப்பட்ட 40 அடி உயர ஏசுநாதர் சிலையின் இரு கை பக்கங்களும் கடுமையாக சேதம் அடைந்து உடைந்து விழுந்துள்ளன.

தேவாலய கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஓடுகள் வேயப்பட்டிருந்தன. அவை, காற்றால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அலங்கார கட்டுமானம் இடிந்து விழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து