முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டிய மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர். பி. உதயகுமார் நன்றி

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிக துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மட்டுமல்லாது பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கஜா புயல் குறித்த கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், கஜா புயல் நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது என்று பாராட்டினார். இந்த நிலையில் ஸ்டாலினின் கருத்து குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அரசின் பணியை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கு நன்றி. இந்த விஷயத்தில் ஊடகங்களுக்கு உள்ள  ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது.

எண்ணிலடங்கா உயிர்களை காக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்பட்டு வருகிறோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து