முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவத் தயார் - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, : கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்யத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்  பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து உதவ உள்துறை செயலருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் அப்போது உறுதி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து