முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறுமையை ஒழிக்க வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்: அருண் ஜெட்லி பேச்சு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டுமானால் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
25-ஆவது வங்கிகள் மாநாடு டெல்லியில்   நடைபெற்றது. அதில் அருண் ஜெட்லி பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2014-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது.

அதன்படி வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 33 கோடி பேருக்கு அத்தகைய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன் வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 14 கோடி பேருக்கு விபத்து காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 5.5 கோடி பேருக்கு ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பல கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறாக, நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை ஒரு புறமிருக்க, முத்ரா திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. வரி விதிப்பை பொருத்தவரை நாடு முழுவதும் தற்போது ஒரே சீரான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம்தான் அந்த நிலை எட்டப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பொருளாதாரத்தில் மேம்பட்டு வரும் நாடுகளுக்கு வளர்ச்சிதான் அதிமுக்கியமான ஒன்று. அதன் அடிப்படையிலேயே தேசத்தை மேம்படுத்த முடியும். வளர்ச்சியை பயன்படுத்திதான் வறுமையை ஒழிக்க இயலும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து