முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயக் கடன் தள்ளுபடி தற்காலிகமான தீர்வுதான்:துணை ஜனாதிபதி பேச்சு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது தற்காலிமான தீர்வாகத்தான் இருக்கும்; விவசாயத் துறையை மேம்படுத்த நீண்ட காலத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம் என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

மும்பை பல்கலைக்கழகம் சார்பில், மும்பையில்  நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

விவசாயத் தொழில் நலிவடைந்து விட்டதால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் குடியேறி வருகின்றனர். இருப்பினும் மக்கள்தொகையில் 56 சதவீதம் பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

விவசாயத் துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பது ஆகியவை தற்காலிகமான தீர்வாகத்தான் இருக்கும். துரதிருஷ்டவசமாக, அரசியல் காரணங்களுக்காக, இதுபோன்ற முடிவுகளை அரசுகள் எடுக்கின்றன. இருப்பினும், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நீண்ட தீர்வுகளை கண்டறிவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயத் துறையில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவது ஒன்றுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும். வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அது, மிக உன்னதமான ஒரு திட்டம். ஆனால், அதை செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.இவ்வாறு அவர் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து