முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வகை போட்டியில் விளையாடுகிறது : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.

முதலில் டி-20...

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் வருகிற 21-ம் தேதி நடக்கிறது. 2-வது ஆட்டம் 23-ம் தேதியும், 3-வது ஆட்டம் 25-ம் தேதியும் நடக்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம்தேதி தொடங்குகிறது. முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 12-ம் தேதி நடக்கிறது.

ரன்கள் குவிக்க...

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுவதற்காக நேற்று இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது. அதிகாலையில் புறப்பட்ட விமானத்தில் இந்திய வீரர்கள் கிளம்பி சென்றனர். முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறும்போது, “பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் விளையாடி ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். சூழ்நிலைக்கு ஏற்ப ஒருங்கிணைந்து விளையாடினால்தான் வெற்றி் பெற முடியும். இப்போது நம்மிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

டி-20 போட்டி:

விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரி‌ஷப் பந்த், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

டெஸ்ட் போட்டி:

விராட் கோலி (கேப்டன்), ரகானே, புஜாரா, ரோகித் சர்மா, முரளி விஜய், லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, விஹாரி, ரி‌ஷப் பந்த், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது சமி, இஷாந்த் சர்மா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து