முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20-யில் அதிக ரன் குவித்த இந்தியர்கள்: ரோகித், விராத் கோலியை முந்தி மிதாலி ராஜ் முதலிடம் பிடித்தார்

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : டி-20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

மிதாலி அபாரம்

மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. மிதாலி ராஜ் 56 ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

மிதாலி 51 ரன்கள்

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை நேற்று முன்தினம் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்தது. மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதையடுத்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

மிதாலி முதலிடம்

இந்நிலையில் டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோலி, டோனி ஆகியோரை விட அதிக ரன் குவித்து அவர் முன்னணியில் இருக்கிறார். மிதாலி ராஜ், 2,283 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, டி20 அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அவர் 2207 ரன்கள் எடுத்திருந்தார். அதை மிதாலி ராஜ் இப்போது முறியடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அதிக ரன்கள் குவித்தவர்கள்:

1) மித்தாலி ராஜ் - 2,283.
2) ரோஹித் சர்மா - 2,207.
3) விராட் கோலி - 2,102.
4) ஹர்மன் பிரித் கவுர்  - 1,827.
5) சுரேஷ் ரெய்னா - 1,605.
6) டோனி - 1,487.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து