முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம்: பிரிட்டன் பிரதமர் திட்டவட்டம்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,ஐரோப்பிய யூனியனிடமிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) வரைவு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.அந்த வரைவு ஒப்பந்தத்துக்கு அவரது கட்சியிலிருந்தே பலத்த எதிர்ப்பு எழுந்து, பல அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு உறுதியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து லண்டனின் எல்.பி.சி. வானொலியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-பிரெக்ஸிட்டை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதுதான் எனது பணியாகும். அந்தப் பணியைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான வரைவு ஒப்பந்தத்தில் பிரிட்டனுக்கு அதிகபட்ச நலன்கள் கிடைப்பதற்கான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை உறுதியாக நம்புகிறேன்.சில எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டால் தங்களது தொகுதிகளில் ஏற்படக் கூடிய தாக்கத்தை மனதில் கொண்டு, அவர்களது கடமையைச் செய்கிறார்கள்.பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்கள் தொடர்வதற்கு அனுமதித்துள்ளதால் அந்த அமைப்பிடம் சரணாகதி அடைந்து விட்டதாக அர்த்தமில்லை.அந்த ஒப்பந்தத்தின் மூலம் சட்டத்தின் கட்டுப்பாடு நமது கைகளுக்குத்தான் வருகிறது. நமது எல்லையும் பலப்படுத்தப்படுகிறது. ஒற்றை சந்தை முறையில் தாராள வர்த்தகப் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.இத்தகைய முன்னேற்றங்களை வலியுறுத்திதான் பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். அவர்களது உத்தரவைத்தான் நான் நிறைவேற்றுகிறேன் என்று தெரசா மே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து