முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸோரம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வெற்றி பெற்றால் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அய்ஸ்வால் : மிஸோரம் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மாநிலத்தின் சாலை வசதிகள் 6 மாதத்துக்குள் மேம்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், மாநில முன்னேற்றத்துக்காக ஆளும் காங்கிரஸ் அரசு ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

40 உறுப்பினர்களைக் கொண்ட மிஸோரம் மாநில சட்டசபைக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது.

சியாஹா பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் நாட்டிலேயே மிகவும் மோசமான சாலை வசதி உள்ள மாநிலமாக மிஸோரம் உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்துக்குள் சாலை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்றார்.

மேலும், மாரா தன்னாட்சி மாவட்ட அமைப்பில் இருந்து பாஜக சார்பாக போட்டியிடும் இருவரும் வெற்றி பெற்றால், தன்னாட்சி மாவட்ட அமைப்புகளுக்கு அதிகளவில் அதிகாரம் அளிக்கும் வகையில், அரசியலமைப்பின் 6-ஆவது அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து