முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் சட்டசபை இப்போது கலைப்பு இல்லை:கவர்னர்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் சட்டசபை, இப்போதைக்கு கலைக்கப்படாது என்று அந்த மாநில கவர்னர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் கவர்னர்  ஆட்சி டிசம்பர் 19-ஆம் தேதி முடிவடையவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டப்படி, அங்கு 6 மாதத்துக்கு மேல் கவர்னர் ஆட்சியை நீட்டிக்க முடியாது. எனவே, கவர்னர் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன், ஜனாதிரதியை ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் மேற்கண்ட கருத்தை கவர்னர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு அளித்த வந்த ஆதரவை, பா.ஜ.க கடந்த ஜூனில் வாபஸ் பெற்றது. இதனால், அங்கு ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, சட்டசபை முடக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பேரவையை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி,  ஆகியவை வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் கவர்னர் மேற்கண்டவாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து