முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை பதவியிலிருந்து நீக்குவதால் பிரெக்ஸிட் எளிமையாகி விடாது பிரிட்டன் பிரதமர் சொல்கிறார்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,தம்மை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றுவதால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) நடைமுறை எளிமையாகி விடாது என்று அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-அரசியல் என்பது மிகவும் கடினமான பணியாகும். அந்தப் பணியை நான் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறேன். பிரெக்ஸிட் விவகாரத்தில் என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, என்னை பதவியிலிருந்து நீக்கினால் மட்டும், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் மிக எளிமையாக வெளியேறி விட முடியாது என்று அவர் தெரிவித்தார்.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரதமர் தெரசா மே அண்மையில் வெளியிட்டார். அந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரெக்ஸிட் விவகார அமைச்சரான டோமினிக் ராப் உள்பட இதுவரை 6 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.மேலும், தெரசா மே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் இறங்கியுள்ளனர். இத்தகைய சூழலில், தெரசா மே இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து