முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் நிதி

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால், இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப் பகுதிகள் மிக கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. அனைத்து வகை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், விவசாயிகளின்  உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம். இதனால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை (சார்ஜிங் டார்ச்லைட், தென்னை - பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கவுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து