முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் மக்களவை தேர்தலில் சுஷ்மா போட்டியில்லை?

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால் : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க.வின் மிக மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார். நீண்ட அனுபவம் கொண்ட அவர், முந்தைய வாஜ்பாய் அரசில் பல முக்கிய துறைகளின் அமைச்சராக விளங்கினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த போது மக்களவை எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பிரசாரத்துக்காக சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார். அப்போது சில செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை அதிகாரபூர்வமாக அவர் அறிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து