முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகை, பணத்துக்காக 7 கணவர்களை மணந்த நவீன கால மனைவி - 5-வது கணவர் ஆந்திர போலீசில் புகார்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருமலை : ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணாவிற்கும், கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி மகள் மோனிகாவுக்கும் 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான கொஞ்ச நாளிலேயே பெண்ணின் அப்பா, மாப்பிள்ளையிடம், மகளை என் வீட்டுக்கு அழைத்து செல்லட்டுமா என்று கேட்டார். மகளை பிரிந்த பாசத்தில் அப்பா இப்படி கேட்கிறார் என நினைத்து மாப்பிள்ளையும் மோனிகாவை அவர் அப்பாவுடன் அனுப்பி வைத்தார்.

ஆனால் போன மனைவியை ரொம்ப நாள் ஆகியும் காணோம். மாமனார் கிட்ட இருந்தும் எந்த தகவலும் வரவில்லை. அதனால் நேரிலேயே போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று மாப்பிள்ளை புறப்பட்டு சென்றார். ஆனால் அங்கு சென்று பார்த்தால் வீடு மட்டும் அல்ல, ஊரையே செய்து விட்டு அவர்கள் போய் விட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை காஜிப்பேட்டை ஸ்டேஷனில் ஒரு புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

விசாரணையில் மோனிகா ஏற்கனவே திருணமானவர் என்பதும் இதுவரை 7 கல்யாணம் மோனிகா செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதில் ராமகிருஷ்ணா 5-வதாக மோனிகாவை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்தது. ராமகிருஷ்ணாவுக்கு பின் மோனிகாவுக்கு 3 கல்யாணம் ஆயிருக்கு.

6-வது கணவர் விசாகப்பட்டினம், 7-வது கணவர் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் போலீசார் அடுத்தடுத்து விசாரணையில் வேகவேகமாக இறங்கினார்கள். மோனிகாவின் செல்போனை வைத்து ஒருவழியாக ஐதரபாத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, வசதி படைத்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து நகை, பணம்னு கொஞ்சம் கொஞ்சமா கறக்க ஆரம்பித்ததும், அதன் பின் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி சண்டையிட்டு விட்டு பிரிந்து சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கல்யாணம் பண்ணி ஏமாற்றி பணம், நகை பிடுங்கி தன் காதலரிடம் கொடுத்து வந்துள்ளாராம் மோனிகா. இதற்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து மாயமான மோனிகாவின் தந்தையை கைது செய்துள்ளதாக காஜிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமுடு தெரிவித்தார். இது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து