முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: ராணுவ துணை தளபதி புரோஹித் மனுவை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணுவ துணை தளபதி பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித்தின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி மும்பை உயர் நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, புரோஹித் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்தச் சிறப்பு மனுவில், "மாலேகான் வழக்கு தொடர்பாக, முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழும் எங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எங்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும். இது குறித்து மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கெüல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், "புரோஹித்தின் கோரிக்கையை  இன்று மும்பை ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் மேல்முறையீடு கோரும் சிறப்பு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று தெரிவித்தனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புரோஹித், சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி, புரோஹித் தரப்பு கோரிக்கையை ஆராயும்படி சிறப்பு நீதிமன்றத்துக்குசுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து