முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டனர்: தமிழகத்தில் எதிர்க்கட்சிகளிடம் உதவி மனப்பான்மையே இல்லை - புயல் பாதித்த பகுதிகளை பார்த்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை : கேரளாவில் நிகழ்ந்த இயற்கை சீற்றத்தின் போது பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டார்கள். ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளிடம் உதவி மனப்பான்மை இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் தெரிவித்தார்.

ரூ.1000 கோடி...

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.  இந்த நிலையில், புயல் பாதிப்பு பற்றி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பார்வையிட்டார்...

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிட சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று காலை 5.30 மணிக்கு  புறப்பட்டார். பின்னர் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர், மச்சுவாடி, மாப்பிள்ளையார் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த அதிகாரிகள் , முதல்வருக்கு புயல் சேதம் பற்றி விளக்கினர்.  பின்னர், புயல் நிவாரண நிதியையும் பாதிக்கப்பட்டோருக்கு  முதல்வர் எடப்பாடி வழங்கினார்.

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது,

இங்கே இல்லை...

கேள்வி:- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முதலில் வரவேற்றன. இப்பொழுது குறை சொல்கிறார்களே?
பதில்:-  இது இயற்கைச் சீற்றம். இதேபோல கேரளாவில் வந்த போது நிவாரணப் பணிகளெல்லாம் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகியது.  அங்கே, எந்த எதிர்க்கட்சிகளும் எந்தவித பிரச்சினையையும் எழுப்பவில்லை.  அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டார்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு அங்கே இருந்தது.  இங்கே இருக்கும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை, நான் என்ன சொல்வது ? இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை,  ஒவ்வொருவரும் தன் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் மட்டுமல்ல, அனைத்து மக்களுமே, நம்முடைய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும், துன்பமான இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவிகள் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அனைத்துத் தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன். 

ஒத்துழைப்பு நல்க...

வித்தியாசம் பாராமல், கட்சி பாகுபாடு இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டுமென்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். அதேபோல, இந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வருகின்ற அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்பொழுதுதான், வேகமாக, துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், அந்தப் பணியில் சுணக்கம் ஏற்படும். ஆகவே, பொதுமக்களும், அங்கு பணி செய்கின்ற அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உரிய இழப்பீடு

மேலும், அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்து, தாழ்வான மற்றும் குடிசைப் பகுதிகளில் இருந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்ததால் பாதிப்புகளை குறைக்க முடிந்தது. புயலுக்கு பிறகு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர, போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பதால், அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து