முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டைய காலம் தொட்டே இந்தியா ஒரு அறிவுசார்ந்த சமுதாயமாக திகழ்ந்து வந்துள்ளது அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேச்சு:

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சார்பாக தேசிய கல்வி தினம் நேற்று பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைபெற்றது. கல்வியியல் துறைத் தலைவர் (பொ) பேரா.க.கலையரசன் வரவேற்புரையாற்றினார்.  இதில் பேசிய அழகப்பா பல்கலைக்கழத் துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.    அவர் தம் உரையில் பேசுகையில் பண்டைய காலம் தொட்டே இந்தியா ஒரு அறிவுசார்ந்த சமுதாயமாக திகழ்ந்து வந்துள்ளது எனறு கூறினார். அவர் தமது உரையில் கூறியதாவது.
     மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இந்திய கல்வி அமைப்பிற்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் நாள் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது என்றார்.  மேலும் இவ்விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்துவதும், உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதுமேயாகும் எனக்குறிப்பிட்டார்.  பொதுவாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களின் கல்வி வாயிலாக வாழ்வியல் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும், அந்த வகையில் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி என்ற தத்துவத்தையும், உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆவார்.  பண்டைய காலம் தொட்டே இந்தியா ஒரு அறிவுசார்ந்த சமுதாயமாக திகழ்ந்து வந்துள்ளது என்பதற்கு நமது பண்டைய நாகரிகங்களும், பண்பாடும், இலக்கியங்களும் சான்றாக அமைந்துள்ளது.  சங்க கால இலக்கியங்கள் சிறந்த அறிவு பெட்டகங்களாக திகழ்கின்றன என்றும், ஒவ்வொரு சமுதாயமும் அதன் இலக்கியத்தை வைத்து அடையாளம் காணப்படுகிறது.  மிகச்சிறந்த காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் மற்றும் காளிதாசருடைய படைப்புகளும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்வியல் தத்துவங்களாக இன்றளவும் உள்ளன எனக்கூறிப்பிட்டார்.
  விழாவில் சிறப்புரையாற்றிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மனித வள மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பேரா.எஸ்.செந்தில்நாதன், கல்வியின் நான்கு முக்கிய குறிக்கோள்களான தெரிந்து கொள்ளுதல்,  அவற்றை செயலாக்குதல், அதன் வழி நடத்தல் மற்றும் ஒற்றுமை உணர்வுடன் செயல்படுதல் ஆகும் என்றார்.  பழைய கல்விக் கோட்பாடுகள் இக்காலக்கட்டத்திற்கு பொருந்தாதது என்றும் 21-ஆம் நூற்றாண்டு மாணவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டத்தில் தேவையான மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் கூறினார்.  ஆசிரியர்கள் எப்பொழுதுமே மாணவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், விழிப்புடன் செயல்பட்டு தரமான கல்வியை அவர்களுக்கு வழங்குவது தங்களின் முக்கிய கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்.  இன்றைய காலக்கட்டத்தில் கற்பித்தலில் மாறிவரும் தொழில்நுட்பங்களை நன்கு கற்று அதன் வழி கற்பிக்க வேண்டும் என்றார்.  கல்வி மூலம் மட்டுமே பொறுப்புள்ள குடிமக்களையும், சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க இயலும் என்றும், இதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது எனக் குறிப்பிட்டார்.
  அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் துறை பேராசிரியர்களும், மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  கல்வியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆர்.ராம்நாத்; நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து