முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகம் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு தரை வழியாக குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் வரும் ஜனவரி முதல் செயல்படுத்தப்படும் என ஏஜி அண்ட் பிஎன்ஜி மார்கெட்டிங் நிறுவன தலைவர் கார்த்திக் சக்கரவர்த்தி கூறினார்.
இதுதொடர்பாக அந்த நிறுவன தலைவர் கார்த்திக் சக்கரவர்த்தி, துணை தலைவர் திவாகர் ஆகியோர் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 7 பகுதிகள் உள்பட  இந்தியாவின் 63 பகுதிகளில் நகர் காஸ் விநியோக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இத திட்ட செயல்பாட்டால் லட்சக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எளிதாக பயனபடுத்தக்கூடிய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத இயற்கை காஸ் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். இந்தியாவின் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 129 மாவட்டங்களை உள்ளடக்கிய 92 பகுதிகளில் நகர் காஸ் விநியோகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக நாட்டின் 11 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகளில் 20 சதவீத மக்கள் பலன் அடைகின்றனர். மேலும் 50 மாவட்டங்களில் நகர் காஸ் விநியோகத்திட்டம் அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் நகர் காஸ் விநியோக உரிமம் பெற்றுள்ளோம்.
    இதுவரை காஸ் இணைப்பு இல்லாத குடியிருப்புகள் , வணிக நிறுவனங்களுக்கு தூய காஸ் விநியோகம் வழங்கப்படும். தரை வழி காஸ் விநியோக பயன்பட்டால்,  தற்போதைய சமையல் காஸ் சிலிண்டர் விலையில் இருந்து 40 முதல் 50 சதவீத கட்டணம் மிச்சமாகும். வாகனங்களுக்கு பயன்படுத்துவதாலும் இதே அளவு மிச்சமாகும். இத்திட்டம் வரும் ஜ-னவரி மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வீடுகளுக்களுக்கு குழாய்கள் மூலம் தரை வழி காஸ் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சுமார் 2 ஆயிரம் பேருக்கு நேர்முக, மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும். இணைப்பு ஒன்றிற்கு தோராயமாக திருப்பி வழங்க கூடிய வகையில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகை வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். ராமநாதபுரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நகர் காஸ் விநியோக உரிமம் ஆணடுகளுக்கு ஏஜி அண்ட் பி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர். அப்போது செய்தி தொடர்பாளர் வினோத் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து