முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்திலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.7லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

 திருமங்கலம். - திருமங்கலம் நகரிலிருந்து மதுரை புறநகர் தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
 தமிழகத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தங்களது அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்பிட உத்தரவிட்டார். இதையடுத்து திருமங்கலம் நகரிலுள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்திலிருந்து தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் அரிசி மூடைகள்,பருப்பு,போர்வைகள்,குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் சேகரிக்கப்பட்டு புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் திருமங்கலம் கள்ளிக்குடி கல்லுப்பட்டி பகுதி திமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து