முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

கேன்பராக் : 3 நாள் பயணமாக, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

காந்தி சிலை திறப்பு

இந்த 3 நாள் பயணத்தின் போது, அவர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிட்னியில் உள்ள பாராமாட்டா நகரில் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்...

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழில்புரியும் சமூகத்தினர் மத்தியில் உரையாடவுள்ளார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் கவர்னர் லிண்டா தேசாவ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டன் ஆகியோரை சந்திக்கிறார். மேலும், ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் மற்றும் இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு இடையே கையெழுத்தாக இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்பார்வையிடவுள்ளார் என்று தெரிகிறது.

முதல் ஜனாதிபதி...

இதற்காக, ஆஸ்திரேலியா சென்றடைந்த அவருக்கு இன்று நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருடைய இந்த பயணத்தில் அவரது மனைவி சவிதா கோவிந்தும் உடன் சென்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து