முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கோவிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளது.

கலெக்டர் தொடங்கி ...

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்கான கார்த்திகை தீப விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகாதீபம் வருகிற வெள்ளிக்கிழமை ஏற்றப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை வெள்ளித் தேரோட்டம், 63 நாயன்மார்களின் திருவீதி உலா மற்றும் விநாயகர், முருகர் தேரோட்டம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து பிற்பகலில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் கோயில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மகாதீபம் ஏற்றம்...

இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை ஒட்டி மாட வீதிகள் முழுவதிலும் 2,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து நாளை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து