முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : பெட்ரோல், டீசல் விலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.31 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.31 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தின விலையில் இருந்து மாற்றமின்றி நேற்றும் அதே விலையிலேயே பெட்ரோல், டீசல் சென்னையில் விற்பனையானது. அதன்படி, நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.79.31 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.31 ஆகவும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து