முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.2 இலட்சம் நிதி மற்றும் ரூ1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்:

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- இராமேஸ்வரம் அருகே  தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் நேற்று நடைபெற்ற உலக மீன்வள தினவிழாவில்  ராமேசுவரம் மீனவர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில்  நிவாரணம் பொருள்கள் மற்றும் நிதி உதவித்தொகையை  மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
   தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில்  கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் மீனவா்கள் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டுசெல்லும் வகையில்   வாகனத்துடன் சுமார் ரூ1.50 இலட்சம் மதிப்பிலான உணவு பொருள்கள்,குடிநீர்,விளக்கு உள்பட நிவாரணப் பொருட்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
  மீனவர்கள் மத்தியில் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவா் வீரராகவராவ் பேசியதாவது:
 உலக அளவில் மீன்வளத்தினை பாதுகாத்தல், கடல் மாசுபாட்டினை தவிர்த்து கடல் வளத்தினை மேம்படுத்துதல், மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துதல் போன்ற நோக்கங்களை வலியுறுத்தும் விதமாக ஆண்டு தோறும் நவம்பா் 21-ஆம் நாள் உலக மீன்வள தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தங்கங்சிமடம் மீனவ கிராமத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்களிடையே விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. மீனவா்களின் வாழ்க்கை அன்றாடம் சவால் நிறைந்ததாகவே உள்ளது. அந்தவகையில் தமிழ்நாடு அரசு மீனவா்களின் நலனை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மீன்பிடி தடைகாலத்தில் உதவித்தொயைhக மீனவா் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கும் திட்டம், மீன்பிடி குறைவு காலத்தில் உதவித்தொயைாக மீனவா் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கும் திட்டம், கடல் மீனவர், மீனவ மகளிர் சேமிப்பு நிவாரணமாக மீனவ கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்களுக்கு தலா ரூ.4,500 வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய திட்டங்களின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் 36,000 மீனவ குடும்பங்கள் மீன்பிடி தடைகால மற்றும் மீன்பிடி குறைவு கால உதவித்தொகையும், ஏறத்தாழ 87,000 மீனவ கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் கடல் மீனவா்,மீனவ மகளிர் சேமிப்பு நிவாரணம் பெற்று பயனடைந்து வருகின்றனா். மேலும், இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சார்ந்த மீனவா்கள் ஒருங்கிணைந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மீனவா்களுக்கு உதவிக் கரம் நீட்டும்  விதமாக தமிழ்நாடு முதலமைச்சா்  பொது நிவாரண நிதிக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், சுமார் ரூ1.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார்கள். இது பாராட்டுதலுக்குரிய மிகவும் உணா்வுப்புர்வமான செயலாகும்.
மேலும், கஜா புயல் தொடா்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நமது மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மீனவா்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதன் காரணமாக, மீனவா்களுக்கோ, அவா்தம் படகுகளுக்கோ பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் உலக மீன்வள தினமான இந்த நல்ல நாளில் மீனவா்கள் அமைதியும், வளமும் பெற்று அவா்தம் வாழ்வாதாரம் உயர வாழ்த்துகிறேன் எனபேசினார். இவ்விழாவில், மீன்வளத்துறை துணை இயக்குநா்  காத்தவராயன், உதவி இயக்குநா்கள் .கோபிநாத், மணிகண்டன்,  மற்றும் மீனவா்கள் சங்க தலைவா்கள் எமரிட், சேசுராஜா, போஸ், மீனவர் மகளிர் அணி தலைவர் இருதய மேரி, தங்கச்சிமடம் பங்குதந்தை அருட்திரு.சந்தியாகு உட்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும் நிகழ்ச்சியில் தொடர்ந்து நிவாரணப்பொருள்களை கொண்டு செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்பகுதியிலிருந்து மீனவ சங்க பிரிதிநிதிகளுடன் வாகனம் புறப்பட்டு சென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து