முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலினால் பாதிப்பிற்குள்ளான அனைத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

  சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த வாரம் கஜா புயலினால் மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலையில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்   அனைத்துத்துறை அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
     சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் கஜா புயலினால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. அதிலும் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய வட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் விளைநிலங்கள், மா, தென்னை, பப்பாளி, வாழை, பாகற்காய் போன்றவைகள் முற்றிலும் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் இழப்பை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை இணைந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மனித இழப்பு இருநபர்களுக்கும், கால்நடைகள் இழப்புகள் மற்றும் வீடுகள் சேதத்திற்கும் உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டதுடன் மேலும் வீடுகள் சேதம் குறித்து அவ்வப்போது வரும் கணக்கிற்கேற்ப நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
     இந்த புயல் அதிகளவில் மின்இணைப்புக்களை பாதிப்படையச் செய்துள்ளது என்து குறிப்பிடத்தக்கதாகும். நமது மாவட்டத்தில் 1100 மின்கம்பங்களுக்கு மேல் பாதிப்படைந்துள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து சுமார் 300-க்கு மேற்பட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். நகர்ப்பகுதி மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு ஓரிரு நாளில் முழுமையாக வழங்கப்பட்டுவிடும். அதேபோல் புயல் பாதிக்கப்பட்ட காலக்கட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் அளவில் மின்இணைப்பு இல்லாத இடங்களில் ஜெனரேட்டரின் மூலமாக மோட்டார் இயக்கி தேவையான தண்ணீர் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்பட்டு வந்தன. அதிலும் ஜெனரேட்டர் வண்டி செல்லாத இடங்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. பொதுவாக மக்களுக்கான சிரமத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. அதற்காக மாவட்ட நிர்வாகத்தை அமைச்சர் என்ற முறையில் பாராட்டுகிறேன். மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நிலுவையிலுள்ள பணிகள் முழுமையாக நிறைவு பெறும்வகையில் செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக மின்வாரியத்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பிற்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினரும் உறுதுணையாக இருப்போம்;. அதேபோல் சேதமடைந்தவற்றை கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை முழுமையாக கிராமப்பகுதிகளுக்கு சென்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு ஒவ்வொருவரின் பொருள் இழப்பையும் தவறாமல் பதிவு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதில் உங்களது பங்கு மிகமிக முக்கியமானதாக இருக்க வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்; தெரிவித்தார்.
       இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சின்னையன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், காரைக்குடி ஆவின் தலைவர் அசோகன், காரைக்குடி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து