முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: ரோகித்சர்மா - விராட்கோலி சாதனை படைக்க வாய்ப்பு

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் ரோகித்சர்மா புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி-20 ஆட்டம் பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

2-வது இடத்தில்...

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 73 இன்னிங்சில் 2271 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ரோகித்சர்மா 80 இன்னிங்சில் 2207 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். குப்தில் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்க ரோகித்சர்மாவுக்கு 65 ரன்களே தேவை.

கோலிக்கு வாய்ப்பு

நேற்றைய ஆட்டத்தில் அந்த வாய்ப்பை நழுவ விட்ட அவர், இந்த தொடரில் குப்திலை முந்த மேலும் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. ரோகித்சர்மா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அதிரடியாக ஆடினார். 2-வது போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார். இதேபோல இந்திய அணி கேப்டன் விராட்கோலியும் ரன்களை குவித்தால் புதிய சாதனை படைப்பார். அவர் 58 இன்னிங்சில் 2102 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் ஆடாததால் அவரை ரோகித்சர்மா முந்தினார். 4-வது இடத்தில் இருக்கும் மேக்குல்லம்மை (நியூசிலாந்து) முந்த கோலிக்கு 39 ரன்களே தேவை. அதையும் விராட் கோலி நழுவ விட்டுள்ளார். எனினும் அவருக்கு வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து