முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட், சச்சினை விட டோனிக்கே அதிக ரசிகர்கள் - ஆய்வில் தகவல்

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : கேப்டன் விராட் கோலி, முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரை விட மகேந்திர சிங் டோனி மிகவும் பிரபலமானவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சிறந்த பினிஷர்...

நீண்ட காலமாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வந்த டோனி, தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். சிறந்த பினிஷர் என்று அழைக்கப்பட்ட டோனி தற்போது 30 ரன்களை கடக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகிறார். மோசமான பாஃர்ம் காரணமாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவருக்கு, டி20 போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் டோனி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

குறையவில்லை...

மோசமாக பாஃர்மை வெளிப்படுத்தி வந்தபோதிலும், டோனியின் மீதான அன்பு அவரது ரசிகர்களுக்கு இன்னும் குறைந்தபாடில்லை. அதற்கு காரணம் ஆட்டத்தின் போதும், அதற்கு வெளியேயும் அவர் நடந்து கொள்ளும் பண்பு தான். எத்தனையோ வெற்றிகளை குவித்த அவர், வெற்றியின் தருணங்களின் போது அவ்வளவு நிதானத்துடனும், பண்புடனுமே நடந்து கொண்டார். ‘கேப்டன் கூல்’ என்ற அந்த ஒரு வார்த்தை போதும். அதனால்தான், டோனியின் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி அவர் மீது அன்பு கொண்டவர்கள் அதிகம். களத்தில் இல்லாத இந்தத் தருணத்திலும் டோனிக்கான ரசிகர் பட்டாளம் குறையாமல் இருக்கின்றனர்.

3-வது இடத்தில்...

இதனை உறுதி செய்யும் வகையில், ‘YouGov Influencer Index 2018’ ஆய்வு முடிவுகள் உள்ளன. இந்தியாவின் மிகவும் பிரபலமான மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே அடுத்து மூன்றாவது நபராக டோனி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம், ஆன்-லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.  5வது இடத்தை நடிகர் அக்ஷய் குமார் பிடித்துள்ளார். அமீர் கானும், ஷாருக்கானும் முறையே 7வது மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் ஆலியா பட் 9வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து