முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கான ரூ. 11ஆயிரம் கோடி நிதியை நிறுத்தி வைத்தது அமெரிக்கா

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,அதிபர் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த சுமார் ரூ.11ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது என்று அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்து அமெரிக்காவை பாகிஸ்தான் சோதித்து விட்டது என்று டிரம்ப் சில தினங்களுக்கு முன்பு அதிருப்தி தெரிவித்திருந்தார்.மேலும், பயங்கரவாதத்தை ஒடுக்க எங்களுக்கு உதவி செய்யாத பாகிஸ்தானுக்கு நாங்களும் நிதியுதவி அளிக்க மாட்டோம். பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பாதுகாப்புக்கான நிதியுதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் டிரம்ப் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்னஞ்சல் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராப் மன்னிங் அளித்த பதிலில், பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த சுமார் ரூ.11ஆயிரம் கோடி நிதி ரத்து செய்யப்பட்டு விட்டது. அதிபர் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா ஏற்கனவே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து