முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன். ராதாகிருஷ்ணனின் கார் பம்பையில் மீண்டும் தடுத்து நிறுத்தம் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்ட கேரள காவல்துறை

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை,சபரிமலையில் தரிசனம் முடித்துத் திரும்பிய மத்திய  அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் காரை பம்பையில் கேரள காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களின் வாகனம் என்று நினைத்ததால் தவறுதலாக வாகனத்தை நிறுத்தி விட்டோம் என்று விளக்கம் தெரிவித்த கேரள காவல்துறை, எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரியது.

சபரிமலை மகரவிளக்கு சீசன் தொடங்கி விட்டதால், பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் போலீசார் விதித்துள்ளனர். நிலக்கல்லில் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்த போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்பின் பக்தர்கள் கேரள அரசுப் பேருந்தில்தான் செல்ல முடியும். இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடிகட்டி சபரிமலைக்குப் புறப்பட்டார். அமைச்சரின் அதிகாரபூர்வ வாகனம் நிலக்கல் பகுதி வந்தவுடன் அதற்கு மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதன்பின் இருமுடியுடன், கேரள அரசுப் பேருந்தில் தன்னுடன் வந்தவர்களுடன் பம்பைக்குப் பயணித்தார்.அதைத் தொடர்ந்து சபரிமலையில் தரிசனம் முடித்த ராதாகிருஷ்ணன் கீழே இறங்கத் தொடங்கினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அரசு பேருந்து நிலையம் அருகே அவரின் கார் செல்லும்போது கேரள காவல்துறையினர், கார்களில் ஒன்றை மறித்தனர். காரில் இருந்தவர்கள் பொன்.ராதாகிருஷ்ணனை போனில் அழைத்து விவரத்தைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். தாங்கள் வழிமறித்தது மத்திய அமைச்சரின் கார் என்பதை அறிந்த கேரள காவல்துறையினர்,போராட்டக்காரர்களின் வாகனம் என்று நினைத்ததால் தவறுதலாக வாகனத்தை நிறுத்தி விட்டதாக விளக்கம் அளித்தனர். அத்துடன் எழுத்துபூர்வமான மன்னிப்புக் கடிதத்தையும் அளித்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து