முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்தை பலவீனமாக்கியதே மோடி அரசின் சாதனை:மன்மோகன் சிங்

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால்,நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கியதும், நாடாளுமன்றம், சி.பி.ஐ. உள்ளிட்டவை மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்ததும்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனைகள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில்  செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங் கூறியதாவது:நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளமாக நாடாளுமன்றம் இருந்தது. விசாரணை அமைப்புகளில் நேர்மையானதாக சி.பி.ஐ. விளங்கியது. ஆனால், அவை இரண்டின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்து, நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கியுள்ளது இப்போதைய அரசு. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்ற அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலை இன்றைய ஆட்சியாளர்கள் மீறியுள்ளனர். நாட்டில் இப்போது நிலவி வரும் சூழ்நிலையை நாம் உடனடியாக மாற்றி அமைக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. மோடி அரசின் ஊழல் உச்சத்தை எட்டியுள்ளது. அரசு மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டனர்.நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்க வேண்டும் என்பதை இந்த அரசு மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது. இந்த அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. சட்டப்பூர்வமாக நடத்தப்பட்ட பெரும் பிழை. அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் மிக அதிகம். அதைத் தொடர்ந்து சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) தவறான முறையில் செயல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்தனர். இவற்றால் அமைப்பு சாரா துறையினரும், சிறு, குறு தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து