முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜியோவுக்கு மாறுகிறது ரயில்வே

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தனது தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைப் பயன்படுத்த ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் தொலைபேசி கட்டணச் செலவு 35 சதவீதம் குறையும்.

கடந்த 6 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனத்தை ரயில்வே பயன்படுத்தி வந்தது. நாடு முழுவதும் சுமார் 1.95 லட்சம் ரயில்வே பணியாளர்களுக்கு ரயில்வே மூலம் செல்லிடப்பேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரயில்வே நிர்வாகம் தொலைப்பேசி, செல்லிடப்பேசி சேவைகளுக்கு ரூ.100 கோடி செலவிட்டு வருகிறது. மிகக்குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளரையும் தனது வசமாக்கியுள்ளது.

ரயில்வே உயரதிகாரிகள் முதல் சி பிரிவு ஊழியர்கள் வரையிலான பயன்பாட்டுக்கு 4 வகையான திட்டங்களை ஜியோ வழங்கியுள்ளது. இதில், சாதாரணமாக பிற வாடிக்கையாளர்களுக்கு உள்ள கட்டணத்தைவிட சற்று குறைவான தொகையில் ரயில்வே நிர்வாகத்தினருக்கு சேவை வழங்க ஜியோ முன்வந்துள்ளது. மேலும், ஏர்டெல் மூலம் 1.95 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே செல்லிடப்பேசி இணைப்பு வசதி அளிக்கப்பட்டது. இப்போது, ஜியோ நிறுவனம் மூலம் 3.78 லட்சம் ரயில்வே பணியாளர்கள் பயனடையவுள்ளனர்.முன்னதாக, ரயில்வேக்கு தொலைத்தொடர்பு வசதி அளிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களைவிட குறைவான தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி அளித்ததன் மூலம் ஜியோ தேர்வு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து