முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ காவல் துறையின் தன்னலமற்ற பணியே காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,காவல் துறையினரின் தன்னலமற்ற பணியால் தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நியமன அறிவிப்பு...சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறையின் வீரத்தியாகிகள் புத்தகம் வெளியிடுதல் மற்றும் 6119 சீருடைப் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது, சென்ற ஆண்டில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால்  15,621 சீருடை பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 16.10.2017 அன்று என்னால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.  நான் அந்த நிகழ்ச்சியில், உரையாற்றுகையில், இதுமட்டுமல்லாமல் இன்னும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் நிரப்பப்பட உள்ளது என்று அறிவித்தேன்.

பணி நியமன ஆணைகள்....செய்வதைதான் சொல்வோம், சொல்வதைத்தான் செய்வோம், மேலும் சொல்லாததையும் செய்வோம் என்ற அம்மாவின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தால்  தேர்வு செய்யப்பட்ட  6,119 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5,531 நபர்கள் காவல் துறைக்கும், 351 நபர்கள் சிறைத் துறைக்கும் 237 நபர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல் துறையில் சுமார் 5 விழுக்காட்டிற்கும் குறைந்த பணியிடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களையும் கூட விரைவில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

8,569 நபர்கள்... தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் இதுநாள் வரை 1,112 சார்பு ஆய்வாளர்களையும், 32,905 இரண்டாம் நிலை காவலர்களையும் தெரிவு செய்து பணிநியமன ஆணை வழங்கியுள்ளது. மேலும், அம்மாவின் ஆணைக்கிணங்க, 2014-ம் ஆண்டில் 9,140 நபர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினராக பணிநியமனம் செய்யப்பட்டு, அவர்களில் 8,569 நபர்கள் இரண்டாம் நிலை காவலர்களாக 2016-2017-ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அம்மா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்ற நிகழ்வுகளை தொடர்ந்து குறைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படியே தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.  அதேபோன்று குற்ற நிகழ்வுகளும் குறைந்துள்ளன. இதுபற்றிய புள்ளிவிவரம்  சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான நகரங்கள்.....மேலும், மெட்ரோ நகரங்களில் சென்னையும், பெரு நகரங்களில் கோயம்புத்தூரும் பெண்கள் வாழ பாதுகாப்பான நகரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் காவல் துறையினரின் தன்னலமற்ற பணி என்பதை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். புது தில்லியில் தேசிய அளவில் பல்வேறு காரணிகள் அடிப்படையில் மாநிலத்தின் வளர்ச்சி ஆய்வு செய்யப்பட்டு அதில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது உங்கள் பணிக்குக் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து