முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வந்தது மத்திய குழு: முதல்வருடன் இன்று ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் சென்னை வந்தனர். சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

பிரதமருடன் சந்திப்பு....புதுடெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக ரூ.1,500 கோடியும் நிரந்தர நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை திரும்புவதற்கு முன்னரே புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த குழுவுக்கு உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய குழுவினர்... இந்த குழுவில் நிதி அமைச்சகத்தின் செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இலாகாவின் பொறுப்பு இயக்குனர் பி.கே. ஸ்ரீவத்சவா, புதுடெல்லியில் உள்ள ஊரக அமைச்சகத்தின் பிரிவு அதிகாரி மாணிக் சந்திர பண்டிட், எரிசக்தித்துறையை சேர்ந்த தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை அமைச்சக இயக்குனர் ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மேற்பார்வை பொறியாளர் இளவரசன் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.

முல்வருடன் ஆலோசனை....இன்று காலை10.30 மணிக்கு முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர், இந்த ஆலோசனையின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் ,நிதித்துறை செயலாளர் வருவாய்த்துறை ,செயலாளர் மின்துறை வேளாண் துறை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து இன்றே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிடுகின்றனர். இன்று முதல் மூன்று நாட்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் வரும் 27-ம் தேதி டெல்லி செல்கின்றனர். இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகத்திடம் தங்களது விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து