முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 2-வது போட்டி மழையால் ரத்து: டி-20 போட்டி தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டத்தை அடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. அடுத்து சிட்னியில் நடக்கும் 3-வது போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பே உள்ளது.

ஆஸி. முன்னிலை....விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பந்துவீச்சு தேர்வு...மெல்போர்னில் 2-வது 20  ஓவர் போட்டி நேற்று தொடங்கியது. தொடர்ச்சியாக ஏழு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ள இந்திய அணி 8-வது முறையாக முத்திரை பதிக்க வேண்டும் என்றால் நேற்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

விக்கெட்டுகள் சரிந்தன....இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஷார்ட் 14 ரன்களும், லின் 13 ரன்கள், ஸ்டாய்னிஸ் 4, மேக்ஸ்வேல் 19 என ஆட்டமிழந்த நிலையில், மெக்டெர்மாட் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதேசமயம் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 19 ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமான ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஆஸி. 132 ரன்கள்....அப்போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்ட் லெவிஸ் விதிப்படி, இந்தியாவிற்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி தொடர்ந்து 8 தொடரை கைப்பற்றம் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு மழை முற்றுப்புள்ளி வைத்தது.
இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், அகமது தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து