முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 55 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,அதிமுக சார்பில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பது சரியான கணக்கீடுதான். கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்தியக்குழுவிடம் விளக்கம் கூறப்பட்டுள்ளது. முதல்வர் மேற்கொண்ட முயற்சியால் மத்தியக்குழு தமிழகம் வந்துள்ளதை பாராட்ட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கமல் இன்னும் குழந்தையாகவே களத்தூர் கண்ணம்மா படத்தில் உள்ளது போல் இருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது. ஏற்கெனவே நிகழ்ந்த பேரிடர்களால் கற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் சீரமைப்பு பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து