முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி - சிட்னியில் இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் சிட்னியில் இன்று நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்னில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்த 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

முக்கிய ஆட்டம்...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் சிட்னியில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது டி-20 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்படாமல் முழுமையாக நடைபெற்று இருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்கலாம். ஏனென்றால் ஆஸ்திரேலியா 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் பாதிக்கப்பட்டது. புவனேஸ்வர்குமாரும், பும்ராவும் நேர்த்தியுடன் பந்துவீசி கட்டுப்படுத்தி இருந்தனர்.

எந்தவித மாற்றமும்...

இன்றைய ஆட்டமும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணி தொடரை இழந்துவிடும். கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டிக்கான அணியிலும் கோலி எந்தவித மாற்றமும் செய்யமாட்டார் என்றே தெரிகிறது.

18-வது போட்டி...

முதல் போட்டியை போலவே சிட்னி ஆட்டத்திலும் வென்று ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 18-வது மோதலாகும். இதுவரை நடந்த 17 போட்டியில் இந்தியா 10-ல், ஆஸ்திரேலியா 6-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய வீரர்கள்

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குணால் பாண்ட்யா, பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஷிரேயாஸ் அய்யர், மனிஷ்பாண்டே,

ஆஸ்திரேலிய வீரர்கள்

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ்லின், மேக்ஸ்வெல், டி.ஆர்.சி. ஷார்ட், அலெக்ஸ் கேரே, பென்மெக்டர்மட், நாதன் கோல்ட்டர், பெகரன்டார்ப், ஆஸ்டார் அகர், ஸ்டான்லேக், ஸ்டோனிஸ் ஆண்ட்ரூடை, ஆடம் ஜம்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து