முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதித்த மாவட்டங்களில் முதல் கட்டமாக மின் சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 200 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு - அமைச்சர் தங்கமணி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

தஞ்சை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் முதல்கட்டமாக  மத்திய அரசு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கடந்த 16-ம் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அங்கு சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவும் புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக மத்திய அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஊரகப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ. 200 கோடி நிதி வழங்கியுள்ளது. அதிகளவில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் சாப்பிட கூட கீழே இறங்காமல் மின் கம்பத்தின் உச்சியிலேயே அமர்ந்து சாப்பிட்டு வருகிறார்கள். வெளிமாநிலத்திலிருந்து வந்த மின் ஊழியர்கள் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றில் இறங்கி மின்கம்பத்தை நட்டு வருகிறார்கள். சுமார் 20 ஊழியர்கள் வரை ஒரு மின் கம்பத்தை நடுவதற்கு தேவைப்படுகிறார்கள். சிலர் பணியின் போது கீழே விழுந்து காயமடைந்த சம்பவங்களும் உண்டு. இவ்வாறு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 2 மின்வாரிய ஊழியர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர்களது வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். மின் வாரிய ஊழியர்களின் பணியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து