முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதித்த கிராமத்தை தத்தெடுக்கும் விஷால்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வீடு இழந்து, தோட்டங்கள், நிலங்களை இழந்து, எதிர்காலமே என்னவென்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து பல தரப்பிலிருந்து செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஏராளமானோர் உதவிகளை செய்து வருகிறார்கள்.

தொழிலதிபர்களும், திரைப்பிரபலங்களும் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பையும் தந்து வருகிறார்கள். விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பலரும் நிதி அளித்துள்ளார்கள்.

சமுத்திரகனி, நடிகர் சத்யராஜ் போன்றோர் வெளிஉலகுக்கே தெரியாமல் தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் விஷால் பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுப்பதாக கூறிய விஷால், தத்தெடுக்க உள்ள அந்த கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து