முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரணப் பணிகளில் தமிழக அரசை குறை கூற முடியாது: தமிழிசை

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

நாகை : புயல் சேதம் மிக அதிகம் என்பதால், சேதங்கள் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசை குறை கூற முடியாது என்றார் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

கஜா புயல் சீற்றத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்டப் பகுதிகளை பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்  பார்வையிட்டு, ஆய்வு செய்தார். செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, வானவன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களைப் பார்வையிட்டு, அப்பகுதி மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மருத்துவ முதலுதவிப் பொருள்களை அவர் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட போது, மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள், கோரிக்கைகளை உணர முடிகிறது. மக்களின் கோரிக்கைகள், பாதிப்பின் வெளிப்பாடுகள் தான்.

எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, எந்தெந்தப் பொருள்கள் தேவை என்பதையறிந்து, அந்தத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பா.ஜ.க சார்பில் ரூ. ஒரு கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன. இதைத் தவிர, எண்ணூர் துறைமுகம் மூலம் ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்து பிரதமர், உடனடியாக தமிழக முதல்வரிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என உறுதியளித்துள்ளார். மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரும் தமிழக முதல்வரிடம் பேசி, உதவிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து