முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.40 லட்சம் நிவாரண பொருட்கள்-அமைச்சர் மணிகண்டன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
           கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து  பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடிஅசைத்து அனுப்பி வைத்தார். அப்போதுஅவர் கூறியதாவது:- கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்களிப்போடு சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
 இதன் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40,45,510 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், ரூ.6,08,090 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம் திருவாரூர் பகுதிக்கும், ரூ.4,05,720 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம்  பட்டுக்கோட்டை பகுதிக்கும் என மொத்தம் ரூ.10,13,810 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வளர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்தும்  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.  
 இந்த நிகழ்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளாகள்; (பொது) எஸ்.கண்ணபிரான், (வளர்ச்சி) நாகேஸ்வரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து