முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் திருக்கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் கடைகள் கட்டியிருந்தால் கடுமையான நடவடிக்கை . 12 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபதாரம்:

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேஸ்வரம்,நவ,25:  இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் சுகாதாரம் மற்றும் ஆக்ரமிப்புகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் வீரராகராவ்  ஆய்வு செய்தார். அப்போது விதிகளை மீறி சாலையில் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்களுக்கு இடையூறாக இருந்த  கடைகளை அகற்றி அபதாரம் விதித்தார்.
   உலக புகழ்பெற்ற பழைமை வாய்ந்த புனித ஸ்தலமாகவும், சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும் இராமேஸ்வரம் விளங்குகிறது. இராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் இந்திய,இலங்கை பொருளாதார மையமாக இயங்கி வந்து கடந்த 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம்தேதி ஏற்பட்ட பெரும்  புயலால் அழிந்து போன தனுஸ்கோடி பகுதிகளை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் என இப்பகுதிகளுக்கு ஆண்டிற்கு சராசரியாக 70 லட்சம்  பேர் வந்து செல்கின்றனர். அதன்படி, இராமேஸ்வரத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலனுக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகளை மத்திய,மாநில அரசுரகள்  பல கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்,  நேற்று திருக்கோவிலின் நான்கு ரத வீதிகளில் சுற்றுப்புறத் தூய்மை, சாலை ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்படி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 12 கடைகளை அகற்றி அந்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2,000  அபதாரம் விதித்து  மொத்தம் ரூ.24,000 அபராதம் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை மற்றும் நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகத்தை சுற்றியுள்ள கழிவுநீர்  வடிகால்களில் முறையாக தூர்வரி  தங்குதடையின்றி கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக சுத்தமாக பராமரித்திட நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதலாக குப்பை தொட்டிகளை வைத்து  குப்பை மற்றும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் இராமேஸ்வரம் திருக்கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் விதிகளை மீறி பக்தர்களுக்கு இடையூறாக சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவா்.  தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து