முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் செல்ல மகளுக்காக முயலாக மாறிய தோனி

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சுட்டி மகள் ஸீவா ஊட்டிய கேரட்டை முயலாக மாறி சாப்பிட்டார் தோனி.

தோனி தற்போது ஓய்வில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகிறார். அப்போது, தன் மகள் கேரட் ஊட்டிய காட்சியை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனி. தோனி டி 20 அணியில் இல்லை. தோனி கடந்த இரண்டு டி 20 தொடர்களில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள் போட்டி அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். 2019 உலகக்கோப்பை வரை தோனி கிரிக்கெட் ஆடுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தோனி தன் நேரத்தை குடும்பத்தினருடனும், விளம்பர நிகழ்ச்சிகளிலும் செலவிட்டு வருகிறார். தன் சுட்டி மகள் ஸீவா செய்யும் குறும்புத்தனங்களை அவ்வப்போது வீடியோ எடுத்து பகிர்வார் தோனி. தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில் ஸீவா நீளமான கேரட் ஒன்றை தோனிக்கு ஊட்டுகிறார். தோனி அதை முயல் போல எக்கி வந்து கடிக்கிறார். இந்த வீடியோ பதிவில், கார்ட்டூனில் வரும் ஒரு முயல் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து