முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் அருகே சாத்தியார் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர்-மதுரைமாவட்டம் அலங்காநல்லூர் அருகே சாத்தியார் அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 16ம் தேதி கஜா புயல் காரணமாக ஒரே நாளில் 60 மிமீ மழையளவு பதிவானது. இதன் மூலம் வினாடிக்கு சுமார் 1600 கனஅடி தண்ணீர் அன்று அணைக்கு வந்தது. இந்த அணையின் நீர் மட்ட கொள்ளளவு 29 அடியாகும். அன்று 26 அடிவரை  நீர் நிரம்பியது. மேலும் இந்த அணை 10 வருடத்திற்கு பின் தற்போது நிரம்பியது. இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாசன விவசாயிகள் அணையை திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 26ம் தேதி அணையை திறக்க உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை 9.45 மணிக்கு சாத்தியார் அணையின் முதல் மதகிலிருந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் செந்தில்குமார், வாடிப்பட்டி தாசில்தார் பார்த்தீபன், அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் ராம்குமார், விவசாய சங்கத்தினர், மற்றும்  பாசன விவசாயிகள் உடனிருந்தனர். தற்போது அணையிலிருந்து வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. தற்போது மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து மிக குறைவாக உள்ளது. இந்த அணையின் நீரால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை பாசன வசதி பெறும்.  இதன் மூலம் கீழசின்னணம்பட்டி, எர்ரம்பட்டி, அய்யூர், சுக்காம்பட்டி உள்பட 10 கிராம கண்மாய் விவசாயிகள் பயனடைவார்கள்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து