கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் தேனியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2018      தேனி
26 krisnasamy

தேனி - தேனி மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில்  இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களின் சந்திப்பின் போது தேவேந்திரகுல வேளாளர்கள் மருத நில மக்கள் என தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத நில மக்கள் வேளாண்மையையே முக்கிய தொழிலாக கொண்டனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் அன்னிய ஆட்சியில் மருத நில மக்களின் நிலங்கள் முழுதும் பறிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் மருத நில மக்களின் வறுமையை போக்க, பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்காமல், பட்டியல் இனத்தில் சேர்த்து விட்டனர்.  வேளாளர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பட்டியல் இனத்திலிருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த 30 வருடங்களாக போராடி வருகிறோம். வரும் டிசம்பர் 15 தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாநாடு நடத்தப்பட உள்ளது. தாழ்த்தப்பட்டோர் என தாழ்த்தி கொடுக்கப்படும் சலுகைகள் எங்களுக்கு தேவையில்லை என்றார்.  மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகளும்,  ஊழியர்களும் இரவு பகலாக  சிறப்பாக பணியாற்றுகின்றனர். அரசியல் தூண்டுதலால் ஒரு சில இடங்களில் சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்று வரும் இந்நிலையில் இடைத்தேர்தலை தற்போது நடத்தாமல் நாடாளுமன்ற தேர்தலோடு நடத்த வேண்டும். கமலஹாசன் தனது வக்கிர புத்தியால் இளைஞர்களிடையே ஜாதிவெறியை தூண்டுகிறார். தற்போது சினிமாவில் தனிநபர்களை முன்னிலைபடுத்துவதற்கும்,  வரக்கூடிய காலகட்டங்களில் வாக்குவங்கியாக மக்களை மாற்றவுமே சினிமாவை பயன்படுத்துகின்றனர். இன்றைய சினிமா தமிழ் சமுதாயத்திற்கு கேடாகும். புதிய தமிழகம் துவக்கப்பட்டதிலிருந்து அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளது. இனிவரும் இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடும். நடிகர்கள் தற்போது முதல்வர் ஆசையில் அரசியலில் நுழைந்துள்ளனர். ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித்தலைவி அம்மாவும் இருந்த பின்புலம் வேறு. தமிழக மக்கள் நிழல் தலைவர்களாக நடிக்கும் நடிகர்களை புறம்தள்ளி நிஜ தலைவர்களை முன்னிலைபடுத்தி ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய தமிழகம் கட்சி ஒரு ஜாதிய கட்சி என்றால் தினகரனின் கட்சியும் இந்த வரையறைக்குள் வரும் தானே? என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து