முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமரின் பெயரால் பிரிவினையை தூண்ட பா.ஜ.க. முயற்சி: மம்தா

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, "கடவுள் ராமரின் பெயரால் மக்களிடையே பிரிவினையை தூண்ட பா.ஜ.க முயற்சிக்கிறது' என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை, ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி போன்ற ஹிந்து அமைப்புகள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக விவாதிக்க, அயோத்தியில் விஹெச்பி சார்பில்  பெரிய கூட்டம் நடைபெற்றது. இதில், ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜம்போனி பகுதியில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மம்தா பானர்ஜி பங்கேற்றுப் பேசியதாவது:

"அனைத்து மதத்தினரும் சமம்' என்ற கோட்பாட்டை, திரிணமூல் காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. கடவுளின் பெயரால் வாக்குகளை கவர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.
ஆனால், ராமரின் பெயரால் மக்களிடையே பிரிவினையை தூண்ட பா.ஜ.க முயன்று வருகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவதன் மூலம் உண்மையிலேயே அவர்கள் ராம பிரானை வழிபடவில்லை; ராவணனைதான் துதிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

மத்திய பாஜக அரசு, நிதி நிர்வாகத்தை முறையாக மேற்கொள்ளவில்லை. "ஜன் தன்' திட்டம், மிகப் பெரிய ஊழல் என்பது விரைவில் அம்பலமாகும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு, ஏழை மக்களுக்கு வழங்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. அதேவேளையில், பொய் செய்திகளை பரப்பவும், மக்களை பிரித்தாளவும் கருப்புப் பணத்தை அவர்கள் (பாஜக) பயன்படுத்தி வருகின்றனர் என்றார் மம்தா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து