முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்த அறிக்கை தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் நிதி ஒதுக்கவேண்டும்: மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை, கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் நிவாரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கஜா புயல் பாதிப்புகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த ஆய்வு முடித்த 2 நாட்களில் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கஜா புயல் பாதிப்பு பகுதிக்ளில் ஆய்வு செய்யும் மத்திய குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய குழு அறிக்கையை தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டதா என்பதை டிசம்பர் 6-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து